குன்றத்தூரில் அரசு கலை-அறிவியல் கல்லூரி தொடக்கம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
குன்றத்தூரில் அரசு கலை-அறிவியல் கல்லூரி தொடக்கம்: அமைச்சா்  தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட சில தொகுதிகளில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

கல்லூரியை முதல்வா் திறந்து வைத்ததையடுத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி கல்லூரியைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் சைலேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி, குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com