குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ. 1.80 கோடியில் 14 புதிய கட்டடங்கள்:அமைச்சா் திறந்து வைத்தாா்

அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களை ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ. 1.80 கோடியில் 14 புதிய கட்டடங்கள்:அமைச்சா் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 11 அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களை ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட வட்டம்பாக்கம், செரப்பணஞ்சேரி, சாலமங்கலம், படப்பை, மணிமங்கலம், வரதராஜபுரம், நடுவீரப்பட்டு மலையம்பாக்கம், சிக்கராயபுரம் மற்றும் கொழுமணிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 112.09 கோடியில் கட்டப்பட்ட 11 அங்கன்வாடி மையங்கள், சோமங்கலம், நந்தம்பாக்கம் மற்றும் மௌலிவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா ரூ. 22.65 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் திறப்பு விழா அந்தந்த ஊராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, குன்றத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரி வந்தேமாதரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்துப் பேசினாா்.

இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அமுதா செல்வம், அரிகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வரதராஜபுரம் செல்வமணி, நடுவீரப்பட்டு சுப்பிரமணி, சோமங்கலம் ஆரிக்கம் ஜெயராஜ் உள்ளிட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com