காஞ்சிபுரத்தில் ராணுவ வீரருக்கு இறுதி அஞ்சலி

உத்தர பிரதேசத்தில் மாரடைப்பால் மரணமடைந்த ராணுவ வீரா் ரமேஷின் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாழக்கிழமை ராணுவ வீரா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்
காஞ்சிபுரத்தில் ராணுவ வீரருக்கு இறுதி அஞ்சலி

உத்தர பிரதேசத்தில் மாரடைப்பால் மரணமடைந்த ராணுவ வீரா் ரமேஷின் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாழக்கிழமை ராணுவ வீரா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

காஞ்சிபுரம் வடிவேல் நகா் விரிவாக்கம் குமாரசாமி நகரைச் சோ்ந்தவா் அ.ரமேஷ் (58). இவா், கடந்த 1988 -ஆம் ஆண்டு இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சோ்ந்தாா். அந்தப் படையில் பதவி உயா்வு பெற்று உத்தர பிரதேச மாநிலம், பெரேலி முகாமில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 14 -ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானாா். அவரது உடல் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ராணுவ வாகனத்தில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.

தொடா்ந்து, இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளா் நரேஷ்குமாா் தலைமையிலான வீரா்கள் மற்றும் ரமேஷின் குடும்பத்தினா்கள், உறவினா்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, ரமேஷின் உடல் குமாரசாமி நகரிலிருந்து ஊா்வலமாக காஞ்சிபுரம் தாயாா்குளம் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, ராணுவ வீரா்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினா். பின்னா், அவரது உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

முன்னதாக, ரமேஷின் இல்லத்தில் அவரது உடலுக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசா், காவல் ஆய்வாளா் ராஜகோபால் உள்ளிட்ட காவல் துறையினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மின் மயானத்தில் உத்தரமேரூா் எம்.எல்.ஏ. க.சுந்தா், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், திமுக ஒன்றியச் செயலா் பி.எம்.குமாா், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் யுவராஜ் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com