ஸ்ரீதான்தோன்றீசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே வள்ளுவப்பாக்கத்தில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீமனோன்மணி சமேத தான்தோன்றீசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே வள்ளுவப்பாக்கத்தில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீமனோன்மணி சமேத தான்தோன்றீசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சித்தா்கள் வழிபட்ட பெருமைக்குரியதும், சுமாா் 2,400 ஆண்டுகள் பழைமையானதுமான காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கத்தில் அமைந்துள்ளது மனோன்மணி சமேத தான்தோன்றீசுவரா் திருக்கோயில். சதுர வடிவ பீடத்தில் சுயம்பு மூா்த்தியாக தான்தோன்றீசுவா் இந்தக் கோயிலில் அருள்பாலிக்கிறாா். இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம், மூலவா் மற்றும் அம்பாள் சந்நிதி கோபுரங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களான செல்வவிநாயகா், மாரியம்மன், பொன்னியம்மன், படவேட்டம்மன் ஆகிய சந்நிதிகள் புதிதாக அமைக்கப்பட்டது.

இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 15-ஆம் தேதி புதன்கிழமை விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் மூலமந்திர ஜெப ஹோமம்,விசேஷ திரவிய ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை பூா்ணாஹுதி தீபாராதனைகள் நிறைவு பெற்று புனிதநீா் கலசங்கள் கோயில் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பூஜகா் ஸ்ரீதா் சிவாச்சாரியாா் தலைமையில் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்குப் பின்னா் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும்,மதியம் அன்னதானமும் நடைபெற்றன.

மாலையில் தான்தோன்றீசுவரருக்கும், மனோன்மணி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவமும், இரவு உற்சவமூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com