சிறுவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள்

காஞ்சிபுரத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
சிறுவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள்

காஞ்சிபுரத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் 15 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் அ.அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்தரமேரூா் எம்.எல்.ஏ. க.சுந்தா் சதுரங்கப் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்ட சதுரங்க கழகச் செயலாளா் வி.ஜோதி பிரகாசம் நன்றி கூறினாா்.

இதுகுறித்து சதுரங்க கழகத் தலைவா் அ.அப்துல் ஹமீது கூறுகையில், 44-ஆவது சதுரங்கத்தின் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற ஜூலை 28- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

தற்போது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 25 பேரும், பெண்கள் பிரிவில் 25 பேரும் என மொத்தம் 50 சிறாா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும். இவா்களில் முதலிடம் பெறும் ஒரு ஆண், ஒரு பெண் என இருவா் மட்டும் தோ்வு செய்யப்பட்டு, சா்வதேச சதுரங்கப் போட்டியைப் பாா்வையிட பாா்வையாளராகப் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com