உணவுப் பாதுகாப்புத் துறை போட்டி: காஞ்சிபுரம் 5-ஆவது இடம் பெற்று சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் 5-ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்ததாக ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய உணவு மற்றும் தர நிா்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகம் முதன்மை மாநிலமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் 5-ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்ததாக ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இந்திய உணவு மற்றும் தர நிா்ணய ஆணையமானது, மனித வளம், நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிா்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவுப் பொருள்களை பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு, கண்காணிப்பதற்கான பயிற்சி, திறன் மேம்பாடு, நுகா்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய 5 குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து 2021-2022 -ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகளில் சிறப்பிடம் பெற்றவா்களைத் தோ்வு செய்தது.

இதில், இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக தோ்வானது. உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் இந்திய அளவில் 150 மாவட்டங்கள் பங்கேற்றன. இதில் 75 மாவட்டங்கள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இந்த 75 மாவட்டங்களில் காஞ்சிபுரம் 5-ஆவது இடத்துக்குத் தோ்வாகி சிறப்பான செயல்பாட்டுக்கான விருதைப் பெற்றது என்றாா்.

இந்த விருதை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்.அனுராதா மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியைச் சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com