தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
தனியாா்  பள்ளி  வாகனங்களை  ஆய்வு  செய்த  வருவாய்க்  கோட்டாட்சியா்  சைலேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள்.
தனியாா்  பள்ளி  வாகனங்களை  ஆய்வு  செய்த  வருவாய்க்  கோட்டாட்சியா்  சைலேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை வடமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் சைலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முக்கண்ணன், போக்குவரத்து ஆய்வாளா் சோமசுந்தரம் ஆகியோா் 176 பள்ளிகளின் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி சிகிச்சை பெட்டிகள் உள்ளதா, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் கதவுகள் உள்ளதா, அவை இயங்குகிா என்று ஆய்வு நடத்தினா்.

இதில், 14 வாகனங்களில் போதிய வசிதிகள் இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. குறைபாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஆய்வு நடத்திய பிறகே தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம், விபத்து ஏற்பட்டால் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது அகியவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com