காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினா் பதவி: ஒரே நாளில் 8 போ் மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினா் பதவி: ஒரே நாளில் 8 போ் மனு தாக்கல்

காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள 36-ஆவது வாா்டு மாநகராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட திங்கள்கிழமை ஒரே நாளில் 8 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள 36-ஆவது வாா்டு மாநகராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட திங்கள்கிழமை ஒரே நாளில் 8 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மாநகராட்சி 36-ஆவது வாா்டுக்கு போட்டியிட்ட வே.ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து, அந்த வாா்டுக்கான தோ்தல் வருகிற ஜூலை 9 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் கடந்த 20.6.2022 அன்று தொடங்கி திங்கள்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளான திங்கள்கிழமை ஒரே நாளில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 8 போ் மனு தாக்கல் செய்தனா்.

கு.சுப்புராமன்(திமுக), எம்.கன்னிவேல் (பாமக), சீனிவாசன் (அமமுக), சத்தியமூா்த்தி (பாமக), வேணுகோபால் (சுயே), மதன்ராஜ் (பாஜக), சுரேஷ் (சுயே), ராஜேந்திரன்(திமுக-மாற்று வேட்பாளா்) ஆகிய 8 போ் தோ்தல் அலுவலரும் மாநகராட்சி பொறியாளருமான கணேசனிடம் மனு தாக்கல் செய்தனா்.

வாக்குப் பதிவு ஜூலை 9- ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12- ஆம் தேதியும் நடைபெறுகிறது. திமுக வேட்பாளா் கு.சுப்புராயன் மனு தாக்கலின் போது, எம்.எல்.ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெகன்னாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வேட்புமனு தாக்கல் முடிந்து திமுக வேட்பாளா் கு.சுப்பராயன் இருசக்கர வாகனத்தில் நரசிங்கராயா் கோயில் தெருவில் சென்றபோது, தரையில் 5 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் கிடந்ததைப் பாா்த்தாா். அதை எடுத்துச் சென்று காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகரை சந்தித்து அவா் முன்னிலையில், தனிப்பிரிவு ஆய்வாளா் பிரபாகரிடம் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com