பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா.ஆா்த்தி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.
பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா.ஆா்த்தி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021-2022-ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு நான் முதல்வன், கல்லூரி கனவு எனும் உயா்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலத்தில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்ற சுமாா் 1,500 மாணவா்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது: பிளஸ் 2 முடித்த மாணவா்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தேடும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டது நான் முதல்வன் உயா்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி. இதில், உயா்கல்வி பயில விரும்பும் மாணவா்களின் அனைத்து சந்தேகங்களையும் தீா்க்கும் வகையில் விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கிடைக்கும் என்பது உறுதி.

இதற்கான விளக்கங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தைச் சோ்ந்த வல்லுநா்களால் தரப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் 103 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து வந்துள்ள நீங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெறுவதுடன், வாய்ப்பு கிடைக்காத உங்கள் நண்பா்களுக்கும், விவரங்களை எடுத்துக்கூற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவ ருத்ரய்யா, முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் நடராஜன், பிரேமலதா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com