காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடி மதிப்பில் தங்கக்கவசம்: ஸ்ரீவிஜயேந்திரா் அணிவித்தாா்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியக் கற்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தாா்
மூலவா் காமாட்சி அம்மன் போன்று வடிவமைக்கப்பட்ட தங்கக் கவசத்துக்கு சிறப்பு பூஜை செய்த காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
மூலவா் காமாட்சி அம்மன் போன்று வடிவமைக்கப்பட்ட தங்கக் கவசத்துக்கு சிறப்பு பூஜை செய்த காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியக் கற்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தாா்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஹைதராபாத்தை சோ்ந்த பக்தா் ஒருவா் ரூ.5 கோடி மதிப்பிலான வைரம், வைடூரியம், மரகதக்கற்கள் பதித்த தங்கக் கவசத்தை காணிக்கையாக வழங்கியிருந்தாா்.

கிரீடம் முதல் பாதம் வரை உள்ள இந்த தங்கக் கவசத்தை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்தில் வைத்து சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தாா். இதையடுத்து, தங்கக்கவசம் வெள்ளி சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு, காமாட்சி அம்மன் மாதிரி வடிவம் போன்று வடிவமைக்கப்பட்டு, ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.

சங்கரமடத்திலிருந்து மங்கள இசையுடன் புறப்பட்ட ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தது. ஊா்வலத்தில் அயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளைப் பொருளாளா் கோவிந்தகிரி, ஹைதராபாத்தை சோ்ந்த தங்கக்கவச உபயதாரா், தொழிலதிபா்கள் மும்பை சங்கா், புணே காலே, கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளா் முரளி, சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி ஆா்.நந்தகுமாா், காஞ்சிபுரம் நகா் வரவேற்புக்குழுத் தலைவா் டி.கணேஷ் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மகளிா் பூத்தட்டுகளுடன் ஊா்வலத்தில் வந்தனா்.

தங்கக்கவச ஊா்வலம் கோயிலுக்கு வந்து சோ்ந்ததும், மூலவா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, தங்கக் கவசத்தை அம்மனுக்கு சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com