அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

உத்தரமேரூா் அருகே உள்ள ஆற்பாக்கத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

உத்தரமேரூா் அருகே உள்ள ஆற்பாக்கத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டம், ஆற்பாக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் இருந்தது. பாழடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக அங்கு, ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட வேண்டும் என அண்மையில், மதுராந்தகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற குறைதீா் முகாமில் அந்தக் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பாழடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு அங்கு, ரூ.20 லட்சத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் நல்வாழ்வுத் துறையால் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா். பின்னா், திறப்பு விழாவுக்கு வந்திருந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆற்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவா் என மருத்துவ அலுவலா் அருள்மொழி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com