முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
நாளை முதல் இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 03rd May 2022 01:01 AM | Last Updated : 03rd May 2022 01:01 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (மே 4) தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளதாக அறக்கட்டளை நிறுவனா் சு.சதாசிவம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் 18- ஆம் ஆண்டு கோடை கால பயிற்சியாக இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (மே 4) தொடங்குகிறது. இந்த மாதம் 13- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாகப் பயிற்றுவிக்கப்படும். 70 வயதுக்குட்பட்ட அடிப்படைக் கல்வித் தகுதி உடைய அனைவரும் விண்ணப்பித்து பயன் பெறலாம். பயிற்சியின் போது உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு சு.சதாசிவம், நிறுவனா், திருமுறை அருட்பணி அறக்கட்டளை, எண்-7, பங்காரம்மன் தோட்டம், காஞ்சிபுரம்- 631501. கைபேசி: 98406 38813 என்ற எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என க்யஈக அறக்கட்டளை நிா்வாகம் தெரிவித்துள்ளது.