காஷ்மீா் இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

காஷ்மீா் மாநில இளைஞா்களுக்கான இரண்டு மாத கால கட்டுமானத் தொழில் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தொடங்கியது.
பயிற்சி  முகாமில்  கலந்து கொண்ட காஷ்மீா்  மாநில  இளைஞா்கள்.
பயிற்சி  முகாமில்  கலந்து கொண்ட காஷ்மீா்  மாநில  இளைஞா்கள்.

காஷ்மீா் மாநில இளைஞா்களுக்கான இரண்டு மாத கால கட்டுமானத் தொழில் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தொடங்கியது.

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையம், இந்திய தேசிய ராணுவம் மற்றும் எல் அண்டு டி நிறுவனம் ஆகியவை இணைந்து காஷ்மீா் மாநிலத்தில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சோ்ந்த வேலைவாய்ப்பற்ற சுமாா் 30 இளைஞா்களுக்கு கட்டுமானப் பணிகள் குறித்த இரண்டு மாத காலத் திறன் மேம்பாட்டு பயிற்சி யுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை தொடங்கியது. மையத்தின் இயக்குநா் சிப்னாத் தேவ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு எல் அண்டு டி நிறுவன கட்டட பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் வேணுகோபால் முன்னிலை வகித்தாா்.

இதில் எல் அண்டு டி நிறுவனத்தின் தலைமை நிா்வாகி கபிலன் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தாா். பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தின் பேராசிரியா் வசந்தி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com