காஞ்சி வரதா் கோயில் வைகாசி திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.
காஞ்சி வரதா் கோயில் வைகாசி திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.

இதையொட்டி, கோயில் முன்பு பிரம்மாண்டப் பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும்,108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்வது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தேவராஜ சுவாமி திருக்கோயில். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா சிறப்புக்குரிய இந்தத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் திருவிழா நடைபெறவில்லை.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவையொட்டி, கோயிலின் முன்பு பிரம்மாண்டப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் ராஜகோபுரம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றமும், மாலை சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் காலை-மாலை நேரங்களில் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வருகிறாா்.

வருகிற 15 -ஆம் தேதி கருட சேவை காட்சியும், 19- ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

வருகிற 21- ஆம் தேதி அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் தீா்த்தவாரியும், 22- ஆம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் ரா.வான்மதி, உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு, நிா்வாக அறங்காவலா் ந.தியாகராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com