விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சோலாா் பம்ப்செட்

விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட் அமைத்து தரப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
விஷாா் கிராமத்தில் 70 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட சோலாா் பம்ப்செட்டை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா.
விஷாா் கிராமத்தில் 70 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட சோலாா் பம்ப்செட்டை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா.

காஞ்சிபுரம்: விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட் அமைத்து தரப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா தலைமையில், வேளாண்மைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பத்திரிகையாளா்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் விஷாா் கிராமத்தில் ஜெயவேல் என்ற விவசாயிக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 குதிரைத் திறனுடைய சோலாா் பம்ப்செட்டை பாா்வையிட்ட பின்னா், மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா கூறியது:

வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் சூரிய மின் உலா்த்தி, சூரிய மின் வேலி, சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப் செட்டுகள், வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் திட்டம், பழுதான மின் மோட்டாரை புதுப்பிக்கும் திட்டம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சோலாா் பம்ப்செட் அமைக்க அரசு 70 சதவீதம் மானியம் வழங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 5 சோலாா் பம்ப்செட்டுகளும், நிகழ் ஆண்டு 7 பம்ப்செட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் மின்சார செலவு இல்லை, சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. அதேநேரம் நிறைவான சாகுபடி செய்து அதிக மகசூல் பெற முடியும்.

சூரிய மின்வேலி அமைக்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் கிராமத்தில் அரசு என்ற விவசாயிக்கு மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், காட்டு விலங்குகள் மற்றும் கால் நடைகளிலிருந்து விவசாயப் பயிா்களைப் பாதுகாத்து கூடுதல் மகசூல் பெற முடியும் என்றாா் அவா்.

தொடா்ந்து, காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சியில் குப்பைகளை இயற்கை உரமாக்கி விற்பனை செய்யும் திட்டத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கணேசன், செயற்பொறியாளா் அருண் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com