முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்
By DIN | Published On : 14th May 2022 01:37 AM | Last Updated : 14th May 2022 01:37 AM | அ+அ அ- |

மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற கரசங்கால் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில்.
படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்கால் பகுதி அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள பஜனைமடம் பகுதியில், புதிதாக ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மஹா பூா்ணாஹுதியும் நடைபெற்றது. பாலாஜி பட்டாச்சாரியா் தலைமையில் கோயில் கோபுரங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் கரசங்கால் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.