குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாதில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாமினை ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மருத்துவ முகாமில் குழந்தைகளின் பெற்றோரிடம் குறைகளைக் கேட்டறிந்து ஆலோசனை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.

வாலாஜாபாதில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஊட்டச் சத்து ஆலோசனை முகாம் நடைபெற்றது. 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமில் கடுமையான எடைக்குறைவு, மெலிவுத்தன்மை, குள்ளத்தன்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தொடக்கி வைத்து ஊட்டச்சத்து பெட்டகங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினாா். இதே முகாமில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வுகள் பற்றியும் விவரிக்கப்பட்டது. ஆட்சியரும் குழந்தைகளின் பெற்றோா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

முகாமில் வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் தேவேந்திரன், சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநா் பிரியா ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட மாவட்ட அலுவலா் மு.கிருஷ்ணவேணி மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com