உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா அரங்கத்தில் 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்.எல்.ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ வரவேற்றாா். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மு.முருகன் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

விழாவில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, 953 பயனாளிகளுக்கு ரூ.4.65 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு 1 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கியது. அண்மையில், கரூரில் நடைபெற்ற விழாவில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. சுமாா் 1.50 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற்ால், தமிழகத்தில் உணவு உற்பத்தி பெருகி உள்ளது.

நாட்டிலேயே தமிழகம்தான் உணவு உற்பத்தியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த 1904-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் முதல் முதலில் உருவாக்கப்பட்டது. தொடா்ந்து, அதே ஆண்டில் நாட்டிலேயே முதல் முதலாக காஞ்சிபுரத்தில் முதல் நகரக் கூட்டுறவு வங்கியும் தொடங்கப்பட்டது. கூட்டுறவு இயக்க முன்னோடி மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்கிறது.

இந்த மாவட்டத்தில் 13,015 பயனாளிகளுக்கு ரூ.60.47 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1,918 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 24,138 பயனாளிகளுக்கு ரூ. 50.21கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயா் ஆா்.குமரகுருபரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். துணைப் பதிவாளா் மு.தயாளன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com