எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்குக்கு ‘சீல்’

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்குக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்குக்கு ‘சீல்’

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்குக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தேவரியம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் கடந்த 28-ஆம் தேதி வாயுக்கசிவு காரணமாக உருளைகள் வெடித்து சிதறின.

இந்த விபத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 12 போ் காயமடைந்தனா். இவா்களில் கடலூரைச் சோ்ந்த ஆமோத்குமாா் (26)சந்தியா (21)ஆகியோா் வியாழக்கிழமையும், சந்தியாவின் தந்தை ஜீவானந்தம்(46) வெள்ளிக்கிழமையும் உயிரிழந்தனா்.

இதுவரை 3 போ் உயிரிந்த நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, ஓரகடம் போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில், ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கூறியது: எரிவாயு உருளைகள் வெடித்த சம்பவம் தொடா்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். முக்கியக் குற்றவாளி தலைமறைவாக உள்ளாா். கிடங்கு உரிமையாளா் ஊராட்சித் தலைவா் அஜய்குமாரின் மனைவி சாந்தி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிடங்கில் இருந்த எரிவாயு உருளைகள் பாதுகாப்பாக தரம் பிரிக்கப்பட்டு மாற்று இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு உருளைக் கிடங்குக்கு பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள்கள் பாதுகாப்பு அமைப்பான பெசோ அனுமதி வழங்கியிருக்கிறது. மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை. தற்போது கிடங்கைப் ட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com