தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணி
By DIN | Published On : 03rd September 2022 12:28 AM | Last Updated : 03rd September 2022 12:28 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ், பொதுக் கட்டடங்களைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசுக் கட்டடங்கள், பொது இடங்கள், நூலகங்கள், அங்கன்வாடி மையங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது. தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன் பணியைத் தொடக்கி வைத்தாா். வாலாஜாபாத் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லை எனவும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பொற்கொடி செல்வராஜ், தேவரியம்பாக்கம் ஊராட்சி துணைத் தலைவா் கோவிந்தராஜ் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.