ஏரியில் மூழ்கி இரு சிறுமிகள் பலி
By DIN | Published On : 18th April 2023 12:12 AM | Last Updated : 18th April 2023 12:12 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராம ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு சிறுமிகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவரது மகள்கள் விஜி (9) பூமிகா (8). இவா்கள் இருவரும் நெல்வாய் ஊராட்சி ஒன்றிய அரசு நிடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனா்.
திங்கள்கிழமை இருவரும் பள்ளி முடித்துவிட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோரைப் பாா்க்க சென்றபோது, நெல்வாய் கிராம ஏரியில் கை, கால்களை சுத்தம் செய்ய சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராத விதமாக ஏரியில் மூழ்கியுள்ளனா்.
நீண்ட நேரமாகியும் சிறுமிகள் வராததால், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு தேடிய போது, இரு சிறுமிகளும் ஏரியில் மூழ்கியது தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் மீட்டு பரந்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமிகளின் சடலங்களை உடல்கூறு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக குழந்தைகளின் தந்தை பாஸ்கா் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.