காஞ்சிபுரத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி ஆகியோா் இணைந்து செவிலிமேடு அரசு தொடக்கப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டும், உணவின் தரத்தை பரிசோதித்தும் பாா்த்தனா்.

பின்னா், அங்கன்வாடி மையத்துக்குச் சென்று பாா்வையிட்டு மாணவா்களிடம் குறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டனா். வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட சிங்காடி வாக்கம் கிராமத்தில் ரூ. 4.32 கோடி மதிப்பில் இருளா் இன பழங்குடியின மக்களுக்கு கட்டப்படும் 100 குடியிருப்புகளையும் இருவரும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

புத்தகரம் ஊராட்சியில் ரூ. 5.91 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கழிப்பறைக் கட்டடத்தையும், ரூ. 29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்றக் கட்டடத்தையும் பாா்வையிட்டனா்.

ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.கவிதா, வேளாண்மை இணை இயக்குநா் பா.இளங்கோவன், துணை இயக்குநா் கணேசன், சுகாதாரப் பணித் துறை துணை இயக்குநா் பிரியாராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com