காஞ்சி ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. 
காஞ்சி ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. 

இந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டும் எழுந்தருளி இருக்கும், கேது ஸ்தலங்களில் முதன்மையானதாக இருந்து வரும் காஞ்சிபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இம்மாதம் முதல் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பூஜகர் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையிலும், சித்ரகுப்த சுவாமி கோயில் பூஜகர் விஸ்வநாத குருக்கள் முன்னிலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலையில் 16 குண்டங்கள் அமைக்கப்பட்டு 34 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினார்கள். இன்று வியாழக்கிழமை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை மங்கல இசை வாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இரவு ஆலயத்தில் கர்ணகி அம்பாளுக்கும் சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாணமும் பின்னர் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே. எம். ரகுராமன், உறுப்பினர்கள் தே. சந்தானம், ரா. ராஜாமணி மற்றும் கோயில் செயல் அலுவலர் அமுதா ஆகியோர் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள்  செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுபோத்கான் சகாய், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர் கே சின்கா,  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு உத்தரமேரூர், எம்எல்ஏ கா.சுந்தர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, தாம்பரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் மா.கரிகாலன் உள்பட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com