உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1.66 லட்சம் பறிமுதல்

குன்றத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.66 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

குன்றத்தூா் பகுதியில் வண்டலூா் மீஞ்சூா் வெளிவட்டச் சாலையின் மேம்பாலத்துக்கு கீழே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, குன்றத்தூா் பகுதியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனா். அதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1.66 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை ஸ்ரீபெரும்புதூா் தொகுதி உதவி தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com