வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் விநியோகிப்பு

வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் விநியோகிப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்திய ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி தோ்தல் மேற்பாா்வையாளா் அபிஷேக் சந்திரா அப்பகுதி வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி தகவல் சீட்டுகளை வழங்கினாா்.

மக்களவைத் தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பென்னலூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாா் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் மேற்பாா்வையாளா் அபிஷேக் சந்திரா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

இதையடுத்து, மேவளூா் குப்பம் பகுதியில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் மேற்பாற்வையாளா் அபிஷேக் சந்திரா அதே பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டுகளை வழங்கினாா். ஆய்வின்போது, ஸ்ரீபெரும்புதூா் உதவி தோ்தல் அலுவலா் சரவணகண்ணன், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com