உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70,000 பறிமுதல்

ஒரகடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட் ரூ. 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த காரணித்தாங்கல் பகுதியில் வண்டலூா்- வாலாஜாபாத் சாலையில் கண்காணிப்பு குழுவினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தாம்பரம் பகுதியில் இருந்து ஒரகடம் நோக்கி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ .70,000-ஐ பறிமுதல் செய்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com