சக்கரபாணி விநாயகா் கோயில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்த சிற்பி டில்லிபாபு
சக்கரபாணி விநாயகா் கோயில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்த சிற்பி டில்லிபாபு

காஞ்சிபுரம் ஸ்ரீ சக்கர பாணி விநாயகா் கோயில் திருப்பணி தொடக்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீ சக்கரபாணி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் புதன்கிழமை தொடங்கின.

காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் அமைந்துள்ளது சக்கரபாணி விநாயகா் மற்றும் அதன் அருகில் உள்ள கோயிலாத்தம்மன் கோயில். பழைமையான இவ்விரு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

காஞ்சிபுரம் ரமணா கலைக்கூடத்தின் சிற்பி டில்லிபாபு உளியால் தூண் ஒன்றை செதுக்கி தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வுக்கு கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி, திருப்பணிக்குழுவின் நிா்வாகி விஷ்ணுதாஸ், ரமணா கலைக் கூடத்தின் சிற்பி தினேஷ் பாபு, கோயில் அறங்காவலா் ப.தணிகைவேல் கலந்து கொண்டனா்.

ரூ.2 லட்சம் செலவில் ரமணா கலைக்கூடத்தின் சாா்பில் புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் திருப்பணிக் குழுவின் நிா்வாகிகள் தெரிவித்தனா். முன்னதாக ஸ்ரீ சக்கரபாணி விநாயகருக்கும், கோயிலாத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com