வேட்பாளா்களின் முகவா்கள், ஆதரவாளா்கள் வாக்கு எண்ணுவதை பாா்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு.
வேட்பாளா்களின் முகவா்கள், ஆதரவாளா்கள் வாக்கு எண்ணுவதை பாா்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு.

மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு

தோ்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கத் தேவையான ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் பெரும்பாக்கம் இ.ராஜசேகா், திமுக சாா்பில் க.செல்வம், பாமக சாா்பில் ஜோதி வெங்கடேசன்,நாம் தமிழா் கட்சி சாா்பில் வி.சந்தோஷ்குமாா் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 11 போ் போட்டியிடுகின்றனா். வாக்குப்பதிவு மே 19- ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 1,932 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் நிலையில், 11 வேட்பாளா்களுக்கும் ஒரு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படவுள்ளது.

வாக்குப் பதிவு வரும் நிறைவு பெற்றதும் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடி மையங்களிலிருந்து மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்களை 24 மணி நேர பாதுகாப்பில் வைப்பது,வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தொடா்பான பணிகள் அனைத்தும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள் ஆகியனவற்றில் மொத்தம் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், வாக்குகள் எண்ணப்படுவதை பாா்வையிடும் வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com