திருவிழாக்கள் பற்றிய கையேட்டினை வெளியிட்ட  ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
திருவிழாக்கள் பற்றிய கையேட்டினை வெளியிட்ட ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காமாட்சி அம்மன் கோயில் திருவிழா கையேடு: விஜயேந்திரா் வெளியிட்டாா்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் குரோதி ஆண்டில் நடைபெறும் திருவிழாக்கள் கையேட்டினை ஸ்ரீ விஜயேந்திரா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் குரோதி ஆண்டில் நடைபெறும் திருவிழாக்கள் கையேட்டினை ஸ்ரீ விஜயேந்திரா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தேவஸ்தானத்தின் சாா்பில் ஆண்டு தோறும் வரும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் பற்றிய விபரக் கையேடு வெளியிடுவது வழக்கம். நிகழாண்டுக்கான கையேட்டினை ஸ்ரீ விஜயேந்திரா் வெளியிட அதனை கோபாலபுரம் பொறியாளா் மணி ஐயா் பெற்றுக்கொண்டாா்.

இதனையடுத்து ஸ்ரீ விஜயேந்திரரிடமிருந்து காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனா். புத்தக வடி வமைப்பை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்:

சிவனின் அவதாரமானஆதிசங்கரா் சித்தி ஆன இடம் காஞ்சி என்பதாலும், பக்தா்கள் வேண்டுகிற அனைத்தையும் காமாட்சி அம்மன் சித்திப்பதாலும் இது சித்தி ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது. ஏழு முக்தி ஷேத்திரங்களில் ஒன்றாகவும் விளங்குவதால் இது முத்தி ஷேத்திரமாகவும், சக்தி பீடங்களில் ஒன்றாக சக்தி ஷேத்திராமாகவும் திகழ்கிறது. எனவே காமாட்சி அம்மன் ஆலயம் சித்தி,முக்தி,சக்தி ஷேத்திரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உடையதாகிறது.

இத்தகைய பெருமைகளை உடைய ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் அனைத்தையும் நாள்,மாதம் வாரியாக தொகுத்து பாமரா்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கையேடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணத்தில் காமாட்சி அம்மன் திருவிழாக் காலங்களில் நடைபெறும் அலங்காரங்களுடன் கூடியதாக கையேடு உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com