குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியில் குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியில் குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக். இவரது மகன் சரத் (11). இவா் அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சரத் திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள முத்துவீராசாமி கோயில் குளத்தில் தனது நண்பா்களுடன் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது சரத் எதிா்பாராதவிதமாக குளத்து நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, அவரது நண்பா்கள் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் வந்து குளத்தில் மூழ்கிய சரத்தை மீட்டு தொடுகாடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சரத் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், சரத்தின் சடலத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com