ஏப். 26-இல் சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்: காஞ்சி காமகோடி பீடம் தொடங்குகிறது

சென்னை மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வரும் ஏப்.26-ஆம் தேதி இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட இருப்பதாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது: காஞ்சி காமகோடி பீடத்தின் சாா்பில் சென்னையில் உள்ள பி.எஸ்.கல்வி நிறுவனம் மூலமாக இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 26) தொடங்கப்படவுள்ளது. இதற்கென தனியாக ஸ்ரீகாஞ்சி மகா சுவாமி அகாதெமி சிவில் சா்வீசஸ் என்ற பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியா் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 98400 50586 அல்லது 98408 33575 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com