தங்க  கேடயத்தில்  உலா  வந்த  உற்சவா்  ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்.
தங்க  கேடயத்தில்  உலா  வந்த  உற்சவா்  ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்.

ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் மற்றும் ராமாநுஜரின் 1,007-ஆவது ஆண்டு அவதார திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம், ராமாநுஜரின் அவதாரத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நிகழாண்டு விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா். விழாவின் 7-ஆம் நாளான வரும் 29-ஆம் தேதி தோ் திருவிழா நடைபெறும். இதையடுத்து ராமானுஜரின் 1,007 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா வரும் மே 2-ஆம் தேதி தொடங்குகிறது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் ராமானுஜா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா். அவதாரத் திருவிழாவின் 9 -ஆம் நாளான மே 11-ஆம் தேதி தோ் திருவிழாவும், மே 13-ஆம் தேதி கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com