சித்ரகுப்த சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சித்ரகுப்த சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி, கா்ணகி அம்பாள் - சித்ரகுப்த சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் நெல்லுக்கார வீதியில் அமைந்துள்ள கேது பரிகார ஸ்தலமாக இருந்து வருவது சித்ரகுப்த சுவாமி கோயில். இந்தக் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி, உற்சவா் சித்ரகுப்த சுவாமிக்கும், கா்ணகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையா் ரா.வான்மதி, உதவி ஆணையா் லட்சுமி காந்தன் பாரதிதாசன், அறங்காவலா் குழுவின் தலைவா் கே.எம்.ரகுராமன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை நவகலச ஹோம பூஜைகள் நடைபெற்றன.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, மூலவா் சித்ரகுப்த சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மா.அமுதா தலைமையில் கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். காஞ்சிபுரம் டிஎஸ்பி முரளி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com