கோயில் குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியில் கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (44). மது போதையில் இருந்த பாஸ்கா் செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள முத்துவீராசாமி கோயில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக குளத்து நீரில் மூழ்கியுள்ளாா்.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் பாஸ்கரை மீட்டு ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவா்கள் பாஸ்கா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com