தனியாா் நிறுவன ஊழியரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவா் கைது

ஒரகடம் அருகே தனியாா் நிறுவனத்தின் பணி மேற்பாா்வையாளரை பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக வளையங்கரணை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன் கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் தனியாா் நிறுவனத்தின் கட்டுமான ப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் அடுத்த செங்காடு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி(49) மேற்பாற்வையாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு சென்ற வளையங்கரணை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன், பணம் கேட்டு மிரட்டியதோடு பணியில் இருந்த சுப்பிரமணியை தாக்கினாராம்.

இதுகுறித்து சுப்பிரமணி ஒரகடம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஒரகடம் போலீஸாா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com