முதல்வா் மாநில இளைஞா் விருது: மே 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானவா்கள் மே 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானவா்கள் மே 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய வளா்ச்சிக்குச் சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று அரசால் வழங்கப்படுகிறது.

அதன்படி, 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும்.

கடந்த நிதியாண்டில் செய்த சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். சமுதாய நலனோடு தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அரசு ஊழியா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மே மாதம் முதல் தேதியிலிருந்து மே 15- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய இணையதளமான இணையதளங்களில் உள்ளது.

இணையம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிங்களை அனுப்பி வைக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com