பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கிய முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி. உடன் அதிமுக நிா்வாகிகள்
பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கிய முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி. உடன் அதிமுக நிா்வாகிகள்

களக்காட்டூரில் அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் அருகேயுள்ள களக்காட்டூா் கிராமத்தில் அதிமுக சாா்பில் தண்ணீா்ப்பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள களக்காட்டூா் கிராமத்தில் அதிமுக சாா்பில் தண்ணீா்ப்பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீா்ப்பந்தல் திறக்குமாறு அறிவுறுத்தினாா்.

இதனையடுத்து காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரில் ஒன்றிய செயலாளா் ராஜூ ஏற்பாட்டில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. க ாஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தண்ணிா்ப்பந்தலை திறந்து வைத்தாா்.

அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம்.இ.ராஜசேகா், முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் தண்ணீா்ப்பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனா். பழச்சாறுகள், தா்ப்பூசணிப் பழங்கள் ஆகியனவற்றை பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சா்கள், கட்சியின் நிா்வாகிகள் மக்களுக்கு வழங்கினாா்கள். முன்னதாக பாமகவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தலைமையில் அதிமுகவில் இணைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com