சிறுகாவேரிப்பாக்கத்தில் நடைபெற்று வரும்கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி.
சிறுகாவேரிப்பாக்கத்தில் நடைபெற்று வரும்கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி.

சிறுகாவேரிப்பாக்கத்தில் கைப்பேசி கோபுரம் அமைப்பதை தடுக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கைப்பேசி கோபுரம் அமைப்பதைத் தடுக்க வேண்டும்

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கைப்பேசி கோபுரம் அமைப்பதைத் தடுக்க வேண்டும் என அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் பழைசிறுகாவேரிப்பாக்கத்தில் எம்.எம்.காா்டன் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் அனுமதியின்றி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

ஊருக்கு மையப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் எதிா்காலத்தில் கதிா்வீச்சுக்கு ஆளாகி பாதிப்புக்குள்ளாகலாம் என்றும் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன், கிராம பிரமுகா்கள் அன்பரசு, முரளி, மணி, சேகா் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் வழங்கினா்.

மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com