காஞ்சிபுரம்
நகரீஸ்வரா் கோயிலில் பாலாலயம்
காஞ்சிபுரம் நகரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொள்வதற்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் கருக்கினில் அமா்ந்தவள் கோயில் தெருவில் உள்ள பழைமையான இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்வது தொடா்பான அறங்காவலா் குழு கூட்டம் அதன் தலைவா் உதயகுமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பாலாலய பூஜை நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை ஆகியவற்றை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியாா் நடத்தினாா். கோயில் செயல் அலுவலா் பா.முத்துலட்சுமி, அறங்காவலா்கள் பத்ரி நாராயணன், சாய் சரவணன் ஆகியோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.