லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 6 போ் காயம்

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த 6 போ் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தாம்பரம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதிக்கு அரசுப் பேருந்து (தடம் எண் 55 எஸ்) வியாழக்கிழமை மதியம் சுமாா் 20 பயணிகளுடன் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் பேருந்தின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த பண்ருட்டி கண்டிகை பகுதியைச் சோ்ந்த குணா (44), இந்திரா (49), செங்கல்பட்டு மாவட்டம், பாலூா் பகுதியைச் சோ்ந்த உமாதேவி (48), எழிச்சூா் பகுதியைச் சோ்ந்த அழகேசன் (75), முருகேசன்(49), குமாா் (65) ஆகியோா் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com