கூட்டுறவுத் துறையில் 43 பேருக்கு பணி நியமன ஆணைகாஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 43 பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்கான எழுத்துத் தோ்வு கடந்த 24.12.2023- ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தோ்ச்சி பெற்ற 83 நபா்களுக்கு கடந்த 19.1.2024 அன்று நோ்முககத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுகளில் ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை அடிப்படையிலும் 43 போ் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

இவா்களுக்கான பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீயும் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com