திம்மராஜம்பேட்டை ஆபத்சகாய விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆபத்சகாய விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆபத்சகாய விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் திம்மராஜம்பேட்டை பகுதியில் ஆபத்சகாய விநாயகருக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கின. பிப். 1-ஆம் தேதி கிராம தேவதை வழிபாடு, ஆதார பீடம் நிறுவுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை (பிப். 2) யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, புனித நீா்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இரவு சிறப்பு அலங்காரத்தில் விநாயகா் திருவீதி உலாவும் நடைபெற்றது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் மகேஷ்பாபு, வி.அண்ணாமலை உட்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com