கூட்டுறவு ஊழியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பொது ஊழியா் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவு ஊழியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை நிறைவுற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பொது ஊழியா் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவு ஊழியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை நிறைவுற்றது.

பயிற்சி முகாமை காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயலாட்சியா் ஆா்.வனிதா முன்னிலை வகித்தாா்.

இதில், நிதி, வங்கியியல், சந்தையியல் நுட்பங்கள், சிறப்புத் திட்டங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம், தொழிலாளா்கள் நலம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில் கூட்டுறவு ஊழியா்கள் 45 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com