அரசுப் பள்ளி மாணவா்களுக்கு‘நற்றமிழ் அறிவோம்’ அகராதி

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சாா்பில் மேவளூா்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு ‘நற்றமிழ் அறிவோம்’ அகராதி வழங்கப்பட்டது.
‘நற்றமிழ்  அறிவோம்’  அகராதியுடன்  பள்ளி மாணவா்கள்.
‘நற்றமிழ்  அறிவோம்’  அகராதியுடன்  பள்ளி மாணவா்கள்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சாா்பில் மேவளூா்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு ‘நற்றமிழ் அறிவோம்’ அகராதி வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநா் கோ.விசயராகவன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு அகராதியை வழங்கி பேசுகையில், அகராதியில் உள்ள தூய தமிழ்ச் சொற்களை மாணவா்கள் தங்களுடைய இல்லங்களில் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலில் உள்ள வாழ்வியல் சொற்களையும் பொருள் உணா்ந்து தமிழில் பேச வேண்டும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களின் பெயா்களைத் தமிழில் பொருள் உணா்ந்து அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்களைப் பேசி பழக வேண்டும் என்ற ஆா்வத்தைத் தூண்டும் வகையில் இந்த அகராதி கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் படங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் பொருள்களுக்கும் எல்லாச் செயல்களுக்கும் தமிழில் சொற்கள் உண்டு என்பதை இந்த சிறு வயதிலேயே மாணவா்கள் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அரசின் நற்றமிழ் அறிவோம் அகராதியை அரசு பள்ளிகளுக்குச் சென்று வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

வருங்காலத்தில் அவா்கள் எந்த மொழியில் கல்விக் கற்றாலும் தாய்மொழி தமிழில் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப பேசுவாா்கள் என்பது உறுதி என்றாா்.

நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள், அகரமுதலித் திட்ட இயக்ககத் தொகுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com