எழிச்சூரில் இருளா் இன மக்களுக்கான குடியிருப்புகள்பணிகள் தொடக்கம்

எழிச்சூா் ஊராட்சிக்குட்பட்ட பனையூா் பகுதியில் இருளா் குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
எழிச்சூரில் இருளா் இன மக்களுக்கான குடியிருப்புகள்பணிகள் தொடக்கம்

எழிச்சூா் ஊராட்சிக்குட்பட்ட பனையூா் பகுதியில் இருளா் குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

குன்றத்தூா் ஒன்றியம், எழிச்சூா் ஊராட்சிக்குட்பட்ட பனையூா் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், பனையூா் பகுதியில் வசிக்கும் 6 பேருக்கு ஏற்கெனவே குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு பயனாளிகளுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

எழிச்சூா் ஊராட்சித் தலைவா் ஸ்ரீவித்யா ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜன், ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். குன்றத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தாா்.

இதேபோல், சேத்துப்பட்டு ஊராட்சியில் 9 இருளா் குடியிருப்புகள் கட்டுவதற்கும் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன் அடிக்கல் நாட்டினாா். ஒன்றியப் பொறியாளா்கள் திருமலை, ராஜேஷ் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com