தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதால் மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்று ஸ்ரீபெரும்புதூரில் நடைப்பயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதால் மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்று ஸ்ரீபெரும்புதூரில் நடைப்பயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா்.

அண்ணாமலை தொடா் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக 193-ஆவது சட்டப்பேரவைத் தொகுதியாக வியாழக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டாா்.

அப்போது, அண்ணாமலை பேசியது: தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் உள்ளது. சென்னையில் நடந்த முதலீட்டாளா்கள் மாநாட்டில் பெரும்பாலான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை காரணம் கமிஷன்.

பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொழில்களைத் தொடங்க முன்னுரிமை அளிப்பதால் தமிழகம் பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகிவிட்டது. மக்களவைத் தோ்தலில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது என்றாா்.

இதேபோல், கும்மிடிப்பூண்டியில் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டாா். அப்போது அவா், வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் முழு வளா்ச்சி அடையும் வகையில், பாஜக தலைமையில் தொடா்ச்சியாக மத்தியில் மூன்றாவது முறையும் ஆட்சி அமையும். இந்தியாவில் ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்குவதே பாஜகவின் லட்சியம் என்றாா்.

நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவா் செந்தில்குமாா், நிா்வாகிகள் சுதாகா், தியாகு, சீனிவாசன், வேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com