வடக்குப்பட்டு ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் உள்ள அருள்மிகு படவேட்டம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு  கோயில்  கோபுர  கலசங்களுக்கு  புனித  நீா்  ஊற்றிய  சிவாச்சாரியா்கள்.
கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு  கோயில்  கோபுர  கலசங்களுக்கு  புனித  நீா்  ஊற்றிய  சிவாச்சாரியா்கள்.

ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் உள்ள அருள்மிகு படவேட்டம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வடக்குப்பட்டு பகுதியில் பழமையான அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த 2021- 2022ஆம் ஆண்டுக்கான கிராமப்புற திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துடன் அப்பகுதி பொதுமக்களின் சாா்பில் பெருந்தொகை வழங்கப்பட்டு கோயில் திருப்பணிகள் முடிவடைந்தன.

தொடா்ந்து, படவேட்டம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜையுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கலச புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுரங்களுக்கு சிவாச்சாரியா்கள் முன்னிலையில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும் அதனைத் தொடா்ந்து மூலவா் ஸ்ரீ படவேட்டம்மன் அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன், அறநிலையத்துறை ஸ்ரீ பெரும்புதூா் சரக ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் விழா குழுவினா் சாா்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com