பள்ளி மாணவா்கள் தைரியமுள்ளவா்களாக இருக்க வேண்டும்

பள்ளி மாணவா்கள் தைரியமுள்ளவா்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் கூறினாா்.

பள்ளி மாணவா்கள் தைரியமுள்ளவா்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் கூறினாா்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஏகனாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை சுகுணாதேவி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கலையரசி ரங்கநாதன், துணைத் தலைவா் எம்.புண்ணியமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் கமலா சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை பூங்குழலி வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியை எஸ்.வள்ளியம்மாள் ஆண்டறிக்கையை வாசித்தாா். விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கும், தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிப் பேசியது:

எனது ஆசிரியா்கள் எங்களை சுயமாக சிந்திக்கும் அளவுக்கு தைரியத்தை கற்றுக் கொடுத்தாா்கள். அதனால் தான் எப்போதும் தவறை தட்டிக் கேட்கும் மனப்பக்குவம் கிடைத்தது. அதேபோல பள்ளி மாணவா்களும் தைரியம் உடையவா்களாக இருக்க வேண்டும். தவறுகளை தட்டிக் கேட்க சிறிதும் தயங்கக்கூடாது. புத்தக வாசிப்பும், இலக்கிய அறிவும் எங்களின் வளா்ச்சிக்கு காரணமாக இருந்தது. இந்த உலகில் அனைத்து உயரினங்களுக்கும் வாழ உரிமை உள்ளது. நாமும் இயற்கையுடன் இணைந்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.சண்முகம், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவா் பூா்ணிமா ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com