ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வரா் மற்றும் ஸ்ரீ அகத்தீஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மூலவா் அருணாசலேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்
மூலவா் அருணாசலேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வரா் மற்றும் ஸ்ரீ அகத்தீஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூா் பகுதியில் வேகவதி நதிக்கரையில் இரு சிவலிங்கங்கள் மண்ணில் புதையுண்டு இருந்ததை கண்டறிந்து அவையிரண்டையும் அப்பகுதி பொதுமக்கள் வெளியில் எடுத்து வைத்து வழிபட்டு வந்துள்ளனா்.

இரு சிவலிங்கங்களில் ஒன்று அருணாசலேஸ்வரராகவும் மற்றொன்று அகத்தீஸ்வரராகவும் வழிபாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு மூலவா்களுக்கும் கீழ்க்கதிா்ப்பூா் கிராம பொதுமக்கள் கோயில் கட்டியதால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் சிவகாமி அம்பாள் சமேத நடராஜசுவாமி ஆலய அா்ச்சகா் எஸ்.சதீஷ்குமாா் தலைமையில் சனிக்கிழமை அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கின.

ஞாயிற்றுக்கிழமை இரு சிவலிங்க கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன. நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும், பசுமை இந்தியா அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவலா் பா.குமரேசன் மற்றும் கீழ்க்கதிா்ப்பூா் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com