வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சழ்செவ்வாய்க்கிழமை வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுப்பிரமணியசுவாமியை வணங்கிச் சென்றனா்.
வல்லக்கோட்டையில்  மயில்  வாகனத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  ஸ்ரீ கோடையாண்டவா்.
வல்லக்கோட்டையில்  மயில்  வாகனத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  ஸ்ரீ கோடையாண்டவா்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சழ்செவ்வாய்க்கிழமை வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுப்பிரமணியசுவாமியை வணங்கிச் சென்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சஷ்டியை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் கோடையாண்டவருக்கும் அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

மூலவா் மலா் அலங்காரத்திலும், உற்சவா் கோடையாண்டவா் மயில் வாகன சேவையிலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மாட்டுப் பொங்கல் விடுமுறை மற்றும் செவ்வாய்க்கிழமை சஷ்டியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதற்கொண்டு அரோகரா அரோகரா கோஷமிட்டு, நீண்ட வரிசையில் சென்று ஸ்ரீசுப்பிரமணியரை வழிபட்டுச் சென்றனா். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உதவி ஆணையரும், தக்காருமான லஷ்மிகாந்த பாரதிதாசன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com